ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி  வருகிறது. பல்வேறு பகுதிகளில் இந்த பனிப்பொழிவின் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா மாவட்டத்திலிருந்து ராணுவ மையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பதகேத் என்னும் கிராமத்தில் ஒரு பெண் பிரசவ வலியால் துடிப்பதாகவும் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் அவரை காப்பாற்ற உதவி செய்யுமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் பள்ளத்தாக்கில் உள்ள கிராமத்திற்கு சென்ற ராணுவ வீரர்கள் கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து கொண்டு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து ராணுவ வீரர்கள் அந்த பெண்ணை சுமந்து சென்ற நிலையில் சுமோ எனும் இடத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ராணுவ வீரர்கள் உடனடியாக உதவி செய்ததால் தாய், குழந்தை இருவரும் காப்பாற்றப்பட்டு நலமாக இருப்பதாக கிராம மக்கள் நன்றி கூறியுள்ளனர். ராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு வளரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.