சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தேர்தல் பணிக்காக வந்த அதிகாரிகள் பள்ளியை எந்த லட்சணத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார்கள் என்பதை அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ வெளியிட்டதோடு பள்ளிக்கூடத்தை எப்படி குப்பை கூலமாக மாற்றி சென்ற அரசு அதிகாரிகளுக்கு அவர் விட்ட டோஸில் அடுத்த சில நிமிடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு குவிந்தார்கள். குழந்தைகள் படிக்கும் பள்ளி என்று கூட பார்க்காமல் அந்த இடத்தை குப்பை கூலமாக ஆக்கிவிட்டு அரசு அதிகாரிகள் சென்றுள்ளார்கள்.

சென்னை முகப்பேரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியை வாக்குச்சாவடியாக பயன்படுத்தி அரசு அதிகாரிகள் அந்த பள்ளியை குப்பைத்தொட்டி போல மாணவர்கள் அமரும் பெஞ்சுகள், நோட்டு புத்தகங்கள் வைக்கும் சிமெண்ட் பலகைகளும் உடைத்து விட்டு கண்டு கொள்ளாமல் சென்றார்கள். இந்த நிலையில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர் .

இதில் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி கோபம் தாங்க முடியாமல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் எங்கள் ஸ்கூலுக்கு வந்து போஸ்டர் ஒட்டுனீங்களே  அதை போகும்போது எடுத்துட்டு போக தெரியாதா? நீங்கள் சாப்பிட்டதை கூட உங்களுக்கு சுத்தம் செய்ய முடியாதா? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா? உங்க பிள்ளைங்க படிக்கிற ஸ்கூலாக இப்படித்தான் செய்வீங்களா? இது எங்க ஸ்கூல் உங்க வீடு கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.