தமிழ் சினிமாவில் பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கும் டிடி என்ற திவ்யதர்ஷினி தற்போது உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அது தொடர்பான வீடியோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிடி அங்குள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்பாக நின்று கொண்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவர் நான் சிறுவயதில் இருக்கும்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என்னால் படிக்க முடியவில்லை. இதனால் வாய்ப்பு கிடைக்கும் மாணவர்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வந்து படியுங்கள் என்று கூறி வருகிறேன். மேலும் படிக்கத்தான் முடியவில்லை அட்வைஸ் ஆவது பண்ணுவோம் என்ற நோக்கத்தில் டிடி பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.