வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சென்ற மாதம் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் அஜித்துக்கு புதுவேகத்தை தந்திருக்கின்றது. இத்திரைப்படத்தை அடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. சென்ற வருடம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவனின் கதை அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டாராம். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஏகே 62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகின்றார் என கூறப்பட்டு வருகின்றது.

இது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மகிழ் திருமேனியின் கதை அஜித்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் பிடித்திருப்பதாகவும் இந்த படத்தில் சண்டை காட்சிகளை சேர்க்க அஜித் வலியுறுத்தி இருக்கின்றாராம். இதனால் கூடுதல் ஆக்சனை சேர்க்கும் பணியில் மகிழ் திருமேனி ஈடுபட்டிருக்கின்றாராம். இதனால் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம் ஏற்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.