தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களைப் பற்றி பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு மனசோர்வுக்கான போராட்டங்கள் அதிக அளவில் இருந்த போது நான் அதை எதிர்த்து போராடினேன். எனக்கு 17 வயது இருக்கும்போது தேர்வுகள் காரணமாக மன அழுத்தம் அதிகமானதால் என்னுடைய அண்ணன் சிரஞ்சீவியின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டு என் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தேன்.

அப்போது என்னுடைய மூத்த சகோதரர் நாகபாபு மற்றும் மைத்துனர் சுரேகா ஆகியோர் என்னை காப்பாற்றினர். என்னுடைய அண்ணன் சிரஞ்சீவி நீ எனக்காக மட்டும் வாழு. எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்று கூறினார். அந்த சமயத்தில் இருந்து என்னை நானே கற்றுக் கொண்டேன். மேலும் புத்தகங்கள் படிப்பது, கர்நாடக இசை மற்றும் தற்காப்பு கலைகள் மூலமாக என்னை நான் வேறு வழியில் திருப்பி கவனத்தை மாற்றினேன் என்று கூறியுள்ளார்.