தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நானே வருவேன் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில் கடந்த 4-ம் தேதி இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தின் பாடல்கள் எல்லாம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி அதாவது நாளை டிரைலர் ரிலீஸ் ஆகிறது. மேலும் இந்த தகவலை படகுழு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.