ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். எல்லா வேலைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிய நிலையில் அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை உடனடியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சிம் கார்டு வாங்குவது, வங்கி கணக்கு போன்ற பல திட்டங்களில் பலனை பெறுவதற்கு சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஆதார் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பின்படி, 10 வருடங்கள் பழமையான ஆதார் கார்டு உடனடியாக புதுப்பிக்க வேண்டும். அதன்படி ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 14ஆம் தேதிக்கு முன்னதாக இதை செய்யவில்லை என்றால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதார் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான இலவச அப்டேட் ஆனது மார்ச் 14 கடைசி நாள். இதை தாண்டி அப்டேட் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.