மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 பட்ஜெட்டில் பிஎம் சூர்யா கர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். அதாவது மேற்கூரை சோலார் திட்டம் என்ற திட்டத்தின் மூலமாக குடியிருப்பு வீடுகளுக்கு மேற் கூரை சோலார் பேனல்கள் நிறுவவும் சூரிய சக்தியை மின்சாரத்திற்கு பயன்படுத்தவும் மானியம் வழங்கப்படுகிறது. இது மின் கட்டணத்தில் பணத்தை மிச்சப்படுத்த உதவும் .இந்த திட்டத்தில் வீடுகளில் சோலார்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் மற்றும் கூடுதல் மின் உற்பத்திக்கு கூடுதல் நிதி கிடைக்கும்.  மேலும் சலுகை கடன்களையும் நேரடியாக மக்களுடைய வங்கி கணக்கிலேயே அரசு செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இந்த திட்டம் ஒரு கோடி வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் பலன்களை பெறுவதற்கு விண்ணப்பதாரர் இந்தியாவில் வசிப்பராக இருக்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். சொந்தமாக வீடு இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இரண்டு கிலோவாட் வரை ஒரு கிலோ வாட்டுக்கு 3000, 3 கிலோ மீட்டர் வரை கூடுதல் திறன் 18000 கிலோவாட் வரை மூன்று கிலோ வாட்டுக்கும் அதிகமான அமைப்புகளுக்கு மொத்த மானியமாக அதிகபட்சம் 78 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.