இந்தியாவில் ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதிலுள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும்.

அதேசமயம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் கார்டு எடுத்தவர்கள் அனைவரும் தனிநபர் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். அப்படி திருத்தம் மேற்கொள்ளவில்லை என்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதற்கான இலவச அப்டேட் மார்ச் 14ஆம் தேதி ஆகும். அதன் பிறகு அப்டேட் செய்பவர்கள் கட்டணத்தை பல மடங்காக செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.