சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றது. அப்போது இரண்டு பெட்டிகளின் கதவுகள் திறக்காததால் பயணிகள் இறங்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் ரயில் புறப்பட்டதால் அவசரகால பட்டனை பயணிகள் அழுத்தியுள்ளனர்.
உடனே பயணச்சீட்டு பரிசோதகர் வந்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதன்பிறகு கொடைரோடு ரயில் நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட  பயணிகள் இறக்கி விடப்பட்டுள்ளனர். அங்குள்ள ரயில் நிலைய அதிகாரி அவர்களை மைசூர் ரயிலில் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தார். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.