சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வடக்கு சேனையர் தெருவில் பழனியாயி என்பவர் சம்பவத்தன்று கடைக்கு டிபன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பழனியாயி கழுத்தில் அணிந்திருந்த 6 1/2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே சுப்ரமணியபுரம் 10-வது வீதியைச் சேர்ந்த சிக்கிரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஷூலா என்பவர் அணிந்திருந்த ஏழு பவுன் தங்க சங்கிலியையும் மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது திருட்டில் ஈடுபட்டது மதுரை பைகாராவை சேர்ந்த பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட கவாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவருடன் மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் மதுரை சைபால் நியூ காலணியைச் சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் ஜான்சன் என்பவர்கள்  உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் அவர்களின் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.