திருச்சி மாநகர போலீசார் 15 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இதனை பாராட்டும் வகையில் முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 55 போலீசாருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களை கௌரவிக்கும் பொருட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா போலீசாரை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.