அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்குரிய அறிவிப்பு சென்ற 15ம் தேதியன்று வெளியிடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத ஆடவர்களிடம் இருந்து அக்னிவீரர் பொதுப் பணி, அக்னிவீரர் தொழில்நுட்பம், அக்னிவீரர் குமாஸ்தா/ஸ்டோர்கீப்பர் தொழில்நுட்பம், அக்னி வீரர் ட்ரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பப் பதிவு 16ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 15ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் மாதம் 17ம் தேதியிலிருந்து நடைபெறவுள்ள ஆன்லைன் எழுத்து தேர்வுக்கு நுழைவுச் சீட்டு ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in எனும் இணையதளத்தை தொடர்ந்து கவனித்து வரவேண்டும். அதோடு விபரங்கள் தெரிந்துகொள்ள சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்திலுள்ள பணிநியமன அலுவலக தொலைபேசி எண்ணான 044-25674924 என்ற எண்ணுக்கு தொடர்புக்கொள்ளலாம்.