பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 60 வயதான முதியவர் ஒருவர் தன் வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்யவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருப்பதாக பேசி உள்ளார். இதுவரை தன் பேத்தி வயதில் உள்ள பெண்களை 26 முறை திருமணம் செய்திருக்கும் அந்த முதியவர், 22 பேரை விவாகரத்தும் செய்துள்ளார்.
பெண்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் தனக்கான குழந்தை பிறந்ததும் அவர்களை பகிரங்கமாக விவாகரத்து செய்வதை அந்த முதியவர் வாடிக்கையாக வைத்துள்ளார். இப்போது 4 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் அவர், அந்த நான்கு பேருக்கும் குழந்தை பிறந்ததும் அவர்களை விட்டு விலகி விடுவேன் என வெளிப்படையாகவே தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் அந்த முதியவர்.