ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவதாக அறிவித்தது, ஒரு தந்திரமான செயல் என்று ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியிருக்கிறார்.
ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ மக்களுக்கு இன்று தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. எனவே, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் போரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட ரஷ்ய அதிபர் புடினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட அவர் நேற்று நண்பகலில் இருந்து இன்று நள்ளிரவு வரை 36 மணி நேரங்களுக்கு தாக்குதல்கள் நடத்த வேண்டாம் என்று தங்கள் படையினருக்கு உத்தரவிட்டார்.
எனினும், அவர் ரஷ்ய படைகளின் தற்காப்பு தாக்குதல்களுக்கு இது பொருந்துமா? அல்லது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டால் ரஷ்யா பதில் தாக்குதல் நடத்துமா? என்பதை தெளிவாக கூறவில்லை. இந்நிலையில், ரஷ்ய அதிபரின் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உக்ரைன் அதிபர் கூறியிருக்கிறார்.
மேலும் உக்ரைன் படையினரின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக அவர் தந்திரம் தீட்டுவதாகவும் குற்றச்சாட்டியிருக்கிறார். மேலும், அவர் எங்களின் அமைதியான திட்டத்தை ரஷ்யா பல தடவை புறக்கணித்து விட்டது. தற்போது அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒரு மறைப்பாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.
ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிப்பில் உள்ள டான்பாஸ் நகரில் உக்ரைன் படையினரின் முன்னேற்றத்தை தடுப்பதற்காகவும், ராணுவ தளவாடங்களை எங்கள் படையினருக்கு அருகில் கொண்டு வரவும், தந்திரம் தான் இது ரஷ்யப்பட எங்கள் நாட்டில் இருந்து வெளியேறவும் போது அல்லது வெளியேற்றப்படும்போதுதான் போர் நிறைவடையும் என்று கூறியிருக்கிறார்