உலகிலேயே முதல் தடவையாக தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்தை அமெரிக்க நாட்டின் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து அசத்தியுள்ளது.

தாவரங்களில் நடக்கும் மகரந்த சேர்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பவை தேனீக்கள் தான். இதனால் தேனீக்களின்றி இந்த உலகத்தில் வேறு எந்த உயிரினமும் கிடையாது என்பது தான் உண்மை. அமெரிக்க நாட்டில் பல மக்கள் தங்களின் குடியிருப்புகளிலும், தோட்டங்களிலும் தேனீ வளர்ப்பு தொழிலை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில் பாக்டீரியாக்கள் மூலம் பவுல் புரூட் என்ற வகை நோய் தேனீக்களை பாதித்தது. இதனால் தேனி வளர்க்கும் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனை தீர்க்கும் விதமாக உலகிலேயே முதல் தடவையாக அமெரிக்க நாட்டின் பயோடெக் நிறுவனமானது, தேனீக்களுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. இங்க மருந்திற்கு நாட்டின் வேளாண்மை துறையும் அனுமதி வழங்கியிருக்கிறது.