இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் உச்ச நீதிமன்றத்தில் தங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும் நிதி ரீதியாகவும் ஆபத்துகள் இருப்பதால் பாதுகாப்பு தர வேண்டும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கு விசாரித்த நீதிபதிகள் அம்பானி குடும்பத்திற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அதோடு வெளிநாடுகளிலும் அம்பானி குடும்பத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதால் அங்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதுகாப்புக்கு ஆகும் மொத்த செலவுகளையும் அம்பானி குடும்பமே ஏற்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.