இன்றைய காலகட்டத்தில் மாத சம்பளம் வாங்குவோருக்கு பணத்தை சேமிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. இந்நிலையில் மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை எப்படி சேமிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். பொதுவாக பலரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புவார்கள். ஆனால் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருப்பதால் அதில் அபாயம் அதிகம். எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பாக தகுந்த ஆலோசனை தேவை. அதன்பிறகு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக திட்டம் சார்ந்த ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வதோடு, உங்கள் ஆலோசகரிடம் உரிய ஆலோசனையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து ரியல் எஸ்டேட் என்பது ஒரு நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாகும். சொத்துக்களை வாங்குவது, விற்பது மற்றும் வாடகைக்கு விடுவது போன்ற வழிகளில் வருமானம் வருகிறது. ரியல் எஸ்டேட் முதலீடுகள் என்பது நிலையான வருமானம் மற்றும் நீண்டகால முதலீடுகளை தருகிறது. ஆனால் இதில் முதலீடு செய்வதற்கு முன்பு தகுந்த ஆலோசனை தேவை. அதோடு பின்னாளில் பிரச்சினை வருமா என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகச் சிறந்த சேமிப்பு என்றே கூறலாம். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் நீங்கள் நகை சேமிப்பு திட்டத்தில் ஒரு குறுகிய தொகையை சேமித்தால் ஓரிரு ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த பணத்திற்கு ஈடாக தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம்.