இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அதன்பிறகு மலைப்பகுதிகளில் அதிக அளவில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் முதன்மை தொழிலாக விவசாயம் இருக்கிறது. இவர்கள் பணப்பயிர்கள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்கிறார்கள். இந்நிலையில் ஒடிசா பழங்குடியின மக்கள் புதிதாக ஸ்ட்ராபெரி சாகுபடியில் ஈடுபட்ட நிலையில் தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

இந்த மாநிலத்தில் அண்மைக்காலத்தில் புதிய பயிராக ஸ்ட்ராபெரி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மகளிர் சுய உதவி குழுக்களின் ஆதரவு, பழங்குடியின மக்களின் கடின உழைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் உதவி மற்றும் மாநில அரசின் நிதி உதவி போன்றவற்றின் மூலம் தற்போது ஸ்ட்ராபெரி சாகுபடியில் வெற்றி கண்டுள்ளனர். மேலும் ஸ்ட்ராபெரி சாகுபடி மூலம் 1 1/2 குவிண்டாலுக்கு (150 கிலோ) ரூ. 37,500 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.