வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், வாழ்நாள் முழுவதும் கொள்கையை கடைபிடிப்பதற்கு… முதல் முதலாக இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றதும் இந்த  திருவண்ணாமலை மாவட்டத்தில் தான்… 1957 சரியாக சொல்ல வேண்டுமானால் ? 23.09.1957 அந்த மாநாட்டில் அருணகிரி அவர்கள் தலைவர். அந்த மாநாட்டினுடைய திறப்பாளர் சிவி அண்ணாமலை. அந்த மாநாட்டைப் பற்றி கலைஞர் அவர்கள் எழுதி இருப்பதை படித்தால் இன்னும் அவ்வளவு வேகம் இருக்கும்.

அந்த மாநாட்டிலே கலைஞர் அவர்கள் என்ன நடந்தது என்பதை தன்னுடைய சுயசரிதத்தில் எழுதி இருக்கிறார்கள். அந்த மாநாட்டில் சொல்கிறார் கலைஞர் அவர்கள்…  மாநாட்டுக்கு துறவி அருணகிரி அடிகள் தலைமை தாங்கினார். காஞ்சி தோழர் சி.எம் அண்ணாமலை மாநாட்டை திறந்து வைத்தார். வாவூர் சண்முகம் வரவேற்புகுழு செயலராக இருந்தார். அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சு  இன்றளவும் இந்தியை எதிர்த்து நிற்பவர்களுக்கு பைபிளாக இருக்கிறது என கலைஞர் அவர்கள் எழுதி இருக்கின்றார்.

அது மட்டுமல்ல இன்னும் சொல்கிறார். என்னை பொறுத்தவரை…  அறிஞர் அண்ணா அன்று பேசுவதற்கு எடுத்துக்கொண்டு நேரத்தை போல், வேறு எந்த மாநாட்டிலும்,  நிகழ்ச்சியிலும் எடுத்துக் கொண்டத்தில்லை.  காரணம் இரண்டரை மணி நேரம் அண்ணா அதிலே பேசியிருக்கிறார். இதுவரை அண்ணாவின் உடைய வரலாற்றில் இரண்டரை மணி நேரம் ஒரு மாநாட்டிலே அண்ணா பேசியிருக்கிறார்..  எதற்காக என்று கேட்டால் ?  முதன்முதலாக இந்தி எதிர்க்கிறோம்.

இது நாட்டில் இருந்து களைய வேண்டும் என்பதற்காக பேசினார். இன்றளவும் அந்த மாநாட்டை நினைத்து பார்க்கிறார்கள். அந்த மாநாட்டில் அண்ணா அவர்கள் உணர்ச்சிமிக்க பேசிய அந்த இரண்டரை மணி நேரம் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல,  கலைஞர் சொல்வார்…  என்னைப் போன்றவர்களுக்கு கூட ரத்தம் கொதித்தது என்பார். அந்த கொதிப்போடு ராஜகோபாலச்சாரியார் வீட்டுக்கு முன்னாள் ஒரு மறியல்…  நீங்கள் கலைஞருடைய நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தை எடுத்து படித்தால் ?  அதிலே விவரமாக எழுதியிருக்கிறார் என துரை முருகன் பேசினார்.