புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஆன்லைன் வெப்சைட்டில் கால்கேர்ள்களை தேடி உள்ளார். அப்போது அந்த வெப்சைட்டில் இருந்த ஒரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மறுமுனையில் பேசிய அந்த நபர் ரூபாய் 17,999 அனுப்ப கூறியதும் உடனடியாக அந்த தொகையை அனுப்பியுள்ளார். பின்னர் எந்த ஒரு அழைப்பும் அவருக்கு கால்கேர்ள் இடமிருந்து வரவில்லை.
அதே நம்பருக்கு தொடர்பு கொண்ட போது எந்த ஒரு பதிலும் இல்லை. அதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
