உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், காதலர் தினத்தன்று காதலி எழுதிய ஒரு கடிதத்தால் 12-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது.
என்.டி.ஏ (NDA) தேர்வுக்குத் தயாராகி வந்த ஆசுதோஷ் என்ற மாணவன், தனது காதலி கடந்த சில நாட்களாகத் தன்னைப் புறக்கணித்து வந்ததால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் காதலர் தினத்தன்று காதலி எழுதிய கடிதத்தில், “நீ செத்துப்போ, உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை” என மிகக் கொடூரமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தைப் பார்த்து மனமுடைந்த ஆசுதோஷ், தனது அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாணவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காதலி மற்றும் அவரது நண்பர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காதலியின் புதிய காதலன் ஆசுதோஷின் செல்போனைப் பறித்துச் சென்று ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது முக்கியக் குற்றவாளியான அந்தக் காதலியைப் பிடித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
