மும்பையின் பாந்த்ரா பகுதியில் ப்ரியா பக்ஷி என்ற வடமாநிலப் பெண் ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோ டிரைவர் நடந்து கொண்ட விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் சொன்ன வழியில் செல்லாமல், ஆட்டோ டிரைவர் அடையாளம் தெரியாத வேறு பாதையில் வாகனத்தைச் செலுத்தியதாகவும், வண்டியை நிறுத்தச் சொல்லி கெஞ்சியும் அவர் கேட்கவில்லை என்றும் ப்ரியா குற்றம் சாட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by PRIYA BAKSHI (@priyabakshi_19)

இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அவர், “மும்பையில் வடமாநிலத்தவர்களைக் குப்பையைப் போலத் தான் நடத்துகிறார்கள்” என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்தப் பெண், ஓடும் ஆட்டோவில் இருந்தே அலறியது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மும்பை ஆட்டோ ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் வடமாநிலத்தவர் மீதான அணுகுமுறை குறித்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.