உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நள்ளிரவு 12 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பிரபல நடிகர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று பதிவிட்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் இந்த புத்தாண்டில் உங்கள் அனைவரின் நம்பிக்கையும் செயலாக்கம் பெறட்டும் என்று வாழ்த்தி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்று பதிவிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பான வருடமாக இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும்  இயக்குனர் செல்வராகவன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று பதிவிட்டுள்ளார்.