ஒருக் காலத்தில் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற படங்களாக இருக்கும் திரைப்படங்களை இப்போது ரீ மேக் செய்யும் கலாச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் தமிழில் பில்லா ரீ மேக் செய்யப்பட்டது. இதேபோன்று இந்தியில் பல வருடங்கள் ஓடி சாதனை படைத்த படம் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே. இது கடந்த 1995 ஆம் வருடம் வெளியாகியது. மும்பையில் ஒரு தியேட்டரில் மட்டும் தொடர்ந்து பல வருடங்கள் இத்திரைப்படத்தை திரையிட்டு வந்தனர்.
ஷாருக்கான், கஜோல் போன்றோர் நடித்த படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. இப்படம் பற்றி சில நாட்களுக்கு முன்பு நாயகி கஜோல் பேசியதாவது, தில்வாலே லே ஜயாங்கே, கபி குஷி கபி கம் உள்ளிட்ட படங்களை ரீ மேக் செய்ய வேண்டும் என யாரும் நினைக்கக்கூடாது. அந்த மேஜிக்கை கொண்டு வர முடியாது. அதனை எவ்வளவு சிறப்பாக எடுத்தாலும் அந்த உணர்வை கொடுக்க முடியாது என கூறி இருக்கிறார்.