சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் “பத்து தல” படத்தை டைரக்டு செய்துள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கன்னடத்தில் கடந்த 2017ம் வருடம் வெளியாகிய “முஃப்தி” படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த திரைப்படத்தில் ஏஜிஆர் எனும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துஉள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதன்பின் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடலான “நம்ம சத்தம்” பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வரும் மார்ச் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது. அதாவது, 2-வது பாடல் குறித்த அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.