தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருந்த பிரபாஸ், பாகுபலி ஹிட் ஆன பின் பான் இந்திய ஹீரோவாகி விட்டார். இதையடுத்து அவர் பான் இந்திய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இப்போது ஆதிபுருஷ், சளார், ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவருக்கு ஏற்கனவே 43 வயதாகும் நிலையில், எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பிரபாஸ் திருமணம் குறித்து பேட்டி  அளித்தார். அதாவது ” திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை என்று கூறினார். மேலும் நான் நிச்சயம் திருமணம் செய்வேன். எனினும் அது எப்போது என்பது எனக்கு தெரியாது” என கூறியிருக்கிறார்.