திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிக்கம்மாள்புரத்தில் ராமசாமி-திருமக்காள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் விக்னேஷ் குமார்(19) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக விக்னேஷ்குமார் புளியம்பட்டியில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென விக்னேஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷ் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.