சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வினோதினி(22) வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோதினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வினோதினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.