கரூர் மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். ரம்யாவின் தாய்வீடு கள்ளக்குறிச்சியில் இருக்கிறது. இந்நிலையில் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ரம்யா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் ரம்யா தாய் வீட்டிற்கும் செல்லவில்லை. மேலும் புளியம்பட்டியில் இருக்கும் கணவர் வீட்டிற்கும் வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனாலும் அவர் கிடைக்காததால் சக்திவேல் தென்னிலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரம்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.