சென்னை மாவட்டத்தில் உள்ள தீவு திடலில் தனியார் பொழுதுபோக்கு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள ராட்டினம் பழுதடைந்ததால் அதனை சரி பார்ப்பதற்கு நேபாளத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் வந்திருந்தார். அவரை ராட்டினத்தின் ஆபரேட்டர் வினோத் அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் ராம்குமார் ரத்தினத்தின் அடியில் அமர்ந்து பழுது பார்த்து கொண்டிருந்த போது ராட்டினத்தை மேலே தூக்குவதற்கான சுவிட்சை ஆன் செய்யுமாறு வினோத்திடம் கூறியுள்ளார். ஆனால் வினோத் தவறுதலாக ராட்டினத்தை சுற்றுவதற்கான சுவிட்சை ஆன் செய்ததால் ராட்டினத்தின் ஒரு பகுதி ராம்குமார் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த ராம்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்தி வருகின்றனர்.