கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் குப்பம் ஆல்பேட்டை கன்னி கோவில் தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிலம்பரசன் தனுஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 19-ஆம் தேதி முகம் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 12:30 மணிக்கு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதனால் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்கள் தீ பிடித்து எரிந்தது. உடனே மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

அதில் 17 வயது சிறுவன் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் மோகனின் நண்பரின் 17 வயது மகளை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த மோகன் அந்த சிறுமியை கண்டித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த கல்லூரி மாணவன் தனது நண்பரான 16 வயது சிறுவனுடன் இணைந்து முகவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் கூர்நோக்கி இல்லத்தில் அடைத்தனர்.