தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காளிராஜ் உள்பட மூன்று பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.