மத்தியப் பிரதேசத்தின் சத்னாவில் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மனிதாபிமானமற்றச் செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ராமநகரைச் சேர்ந்த கம்லேஷ் ராவத் என்பவர் விபத்தில் கால் உடைந்ததால் முதலுதவிக்குப் பின், 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்னா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பயணத்தின்போது, வலி அதிகமானதால் அவர் வாந்தி எடுக்கவே, ஆம்புலன்ஸ் அழுக்கானது.

மாவட்ட மருத்துவமனை முக்கியக் கேட்டை ஆம்புலன்ஸ் அடைந்தபோது, வாந்தியைச் சுத்தம் செய்யாவிட்டால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாது என்று ஓட்டுநர் கடுமையாக மறுத்துள்ளார்.

இதன் விளைவாக, உதவிக்கு ஆள் இல்லாததால், அந்தப் பெண் கணவரின் வாந்திக் கறையை தண்ணீர் ஊற்றிக் கழுவிச் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார்.

இந்தச் சம்பவம், ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நடத்தை குறித்துப் பலத்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆம்புலன்ஸின் நம்பர் பிளேட்டில் சட்டீஸ்கர் மாநிலக் குறியீடு இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.