கர்நாடக மாநிலம், கொப்பல் தாலுக்காவில் உள்ள பழைய நிங்கபுரா அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவுத் திட்ட உணவில் (Mid-Day Meal) புழுக்கள் இருந்ததைக் கண்டுப் பெற்றோர்கள் பெரும் ஆத்திரமடைந்தனர்.

அக்ஷரா தசோம்ஹா (Akshara Dasoha) என்ற அமைப்பால் விநியோகிக்கப்பட்ட அரிசியில் இந்தப் புழுக்கள் இருந்ததாகவும், இந்த அரிசி நீண்ட நாட்களாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பள்ளி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமைத்த உணவில் புழுக்கள் இருப்பதை அறிந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் புகாரளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் உணவுப் பணியாளர்களின் அலட்சியத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அரிசியின் தரத்தைச் சோதிக்கும் பணியாளர்கள் தங்கள் கடமையைச் செய்யவில்லை என்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

மாணவர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்தக் கவலையால், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் ஹனுமந்தப்பா ஹட்டி அவர்கள் மாவட்ட நிர்வாகம் இந்தச் சம்பவம் குறித்துச் சரியான விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.