குருகிராமில் வசிக்கும் ஒரு ரஷ்ய பெண்ணின் மாதாந்திர செலவுகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் விக்டோரியா கோவன் என்பவர் பகிர்ந்த இந்த வீடியோவில், 1BHK பிளாட்டிற்கு மாதம் 1.2 லட்ச ரூபாய் வாடகை செலுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதுதவிர, உபர் பிளாக் டாக்ஸிக்கு ஒரு பயணத்திற்கு 1,000 ரூபாய், மதிய உணவுக்கு 2,500 ரூபாய், மின்சார கட்டணமாக 15,000 ரூபாய், ஷாப்பிங்கிற்கு 30,000 ரூபாய், மருந்துகளுக்கு 20,000 ரூபாய், அழகு பொருட்கள் மற்றும் சந்திப்புகளுக்கு 15,000 ரூபாய், மளிகை பொருட்களுக்கு 40,000 ரூபாய் செலவிடுவதாக பட்டியலிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Viktoriia Kovan (@meowvi.vi)

“இந்தியாவில் வாழ்க்கை மலிவு என்கிறார்கள், ஆனால் குருகிராமில் நல்ல வாழ்க்கை முறைக்கு பெரிய பணப் பையை தயார் செய்ய வேண்டும்” என அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதும், நெட்டிசன்கள் இவரை கடுமையாக விமர்சித்து ட்ரோல் செய்ய தொடங்கினர். பலர் இவரது செலவுகளை “அடிப்படை” செலவு என்று கூறுவது பொருத்தமற்றது எனவும், இவை ஆடம்பரமான தேர்வுகள் என்றும் கருத்து தெரிவித்தனர்.

“உங்களை வீட்டு உரிமையாளர் ஏமாற்றுகிறார்” என்று ஒருவர் கமெண்ட் செய்ய, “15,000 மின்சார கட்டணமா?” என மற்றொருவர் கிண்டல் செய்தார்.

“பிளாக் உபருக்கு பதில் சாதாரண உபர் பயன்படுத்தினால், வாடகை அதிகமெனில் குறைவான வாடகை உள்ள இடத்தை தேடவேண்டும் ” என்று சிலர் அறிவுரை கூறினர். “இவை அடிப்படை செலவுகள் இல்லை,  ஆடம்பர வாழ்க்கை முறையின் விளைவு” என ஒரு நெட்டிசன் குறிப்பிட்டார். இந்த விவாதம் குருகிராமில் வாழ்க்கை செலவு குறித்த புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.