பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோஹல்பிரீத் சிங் சித்து (Sohalpreet Singh Sidhu), தனது 15 வயதிலேயே படிப்பை விட பால் பண்ணை தொழிலில் அதிக ஆர்வம் காட்டினார்.
2023-ல் தனது வீட்டில் இருந்த 5 மாடுகளுடன், குடும்பத்தின் உதவியால் 1.20 லட்சத்திற்கு ஒரு எருமையை வாங்கி தனது பயணத்தைத் தொடங்கினார்.
மூன்றே ஆண்டுகளில் தற்போது அவரிடம் 55 எருமைகள், 15 பசுக்கள் மற்றும் 50 கன்றுகள் என மொத்தம் 120 கால்நடைகள் உள்ளன. இதில் முர்ரா (Murrah) இன எருமைகளே அதிகம்.
தினமும் 700 லிட்டர் பால் உற்பத்தி செய்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறார். இதன் மூலம் மாதம் 10 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது, அதில் 60% அதாவது 6 லட்சம் ரூபாய் லாபமாக கிடைக்கிறது.
கிடைக்கும் லாபத்தை அப்படியே மீண்டும் தொழில் வளர்ச்சிக்காகவே முதலீடு செய்கிறார். இவரது லட்சியம் 550 எருமைகளை வளர்ப்பதுதான்.
இன்றைய பஞ்சாப் இளைஞர்கள் வெளிநாடு செல்லத் துடிக்கும்போது, தனது பெற்றோரிடம் “என்னை வெளிநாடு அனுப்பப் பணம் செலவு செய்யாதீர்கள், அந்தப் பணத்தை தொழிலில் முதலீடு செய்ய உதவுங்கள்” என்று கூறி சாதித்துக் காட்டியுள்ளார்.
சோஹல்பிரீத். தற்போது நவீன வசதிகளுடன் கூடிய பண்ணையில் 6 தொழிலாளர்களை வைத்து இந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
