நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட்தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தனி தனியே நீட்தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் முது நிலை மருத்துவ படிப்புகளுக்குரிய நீட்தேர்வானது நாடு முழுவதும் நேற்று நடந்து முடித்து.

இதனைத்தொடர்ந்து 2023ம் வருடத்துக்கான இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட்தேர்வுக்கு இன்று (மார்ச்-6) முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. தேர்வர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளங்கலை படிப்புக்கான நீட்தேர்வு வருகிற மே மாதம் 7-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.