10 மணி நேரமும் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டு சிபிஐ அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர் என்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்ளை ஊழல் விவகாரத்தில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் நேரில் ஆஜரானார்.
அவரிடம் எட்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை முடிவில் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை நேற்று வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரெவென்யு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது பேசிய மணிஷ் சிசோடியா தன்னை சிபிஐ அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் 9 முதல் 10 மணி நேரம் வரை அமர வைத்து ஒரே கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகியதாக கூறினார்.