நாடு முழுவதும் சமீபத்தில் பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு A H3n2 வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது உயிருக்கு ஆபத்தான வைரஸ் கிடையாது. சாதாரண பாரசிட்டமல் மாத்திரையை இதற்கு போதுமானது. மேலும் அதிக நீரை அருந்துவது, முக கவசம் அணிவதன் மூலமாக தொற்று பரவலை தடுக்கலாம் என்று ஐ சி எம் ஆர் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் நாட்டில் புதிதாக பரவும் காய்ச்சலை தவிர்க்க பல்வேறு வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. பிறருடன் கை குலுக்குவது, பிறரை வரவேற்கும்போது தொடுவது, பொது இடங்களில் எச்சில் துப்புவது, மருத்துவரின் ஆலோசனையின்றி ஆன்டி பயோடிக்ஸ் பயன்படுத்துவது, பிறருடன் நெருக்கமாக அமர்ந்து சாப்பிடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது