
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், உண்மையிலேயே நீங்கள் இமானுவேல் சேகரனார் உடைய இலக்குகளை நிறைவேற்ற வேண்டுமென்றால், சமூக நீதியை நிலை நாட்டுங்கள். இன்னைக்கு கூட வெளியில செய்தியாளர்களை சந்தித்தேன். தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துங்க என சொன்னேன். ஏன் நடத்தக்கூடாது ? முதலமைச்சர் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மத்திய அரசு ஜாதி வாரி கணக்கு எடுப்பு நடத்தணும், எங்களுக்கு அதிகாரம் இல்லை என சொல்லுறாரு.
என்ன அதிகாரம் இல்லை ? உங்களுக்கு… சமூக நீதி பேசுற திமுக அரசு, தந்தை பெரியார் வழியில் வந்தவர்கள் நாங்கள் என்று சொல்லுகிற திமுக அரசு, சமூக நீதிக்கு அடிப்படையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதி வரை கணக்கெடுப்பு என்றால், தலையை மட்டும் எண்ணுவது கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சமுதாயமும்…. எந்த சமூகம் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் ?
பொருளாதார நிலையில் எப்படி இருக்கிறார்கள் ? கல்வியிலே… சுகாதாரத்தில்… வேலைவாய்ப்பில்….. வீடு இருக்கிறதா ? தண்ணீர் வருகிறதா ? விவசாய நிலம் எவ்வளவு இருக்கிறது ? இப்படி எல்லாம் கணக்கு…. ஒரு 19, 20 குறியீடுகள் இருக்கிறது. அதை எல்லாம் கணக்கெடுத்து அதற்கு ஏற்ப வியூகங்களை அமைப்பதுதான் நல்ல அரசுக்கு அழகு. ஆனால் அதை நான் எடுக்கவே மாட்டேன். அந்த பக்கம் நான் போகவே மாட்டேன்னு சொல்றதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. கடமையை தட்டிக் கழிப்பது என தெரிவித்தார்.