திமுக  தொண்டர்களிடம்  பேசியதமிழக முதல்வர் ஸ்டாலின், தலைவர் கலைஞர் தி.மு.க.வோட கொள்கைகள, ஐம்பெரும் முழக்கங்களாக சொன்னார். அதுல அஞ்சாவது முழக்கம்: “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி”. இந்தக் குரல் தெற்குல மட்டுமல்ல, வடக்குல காஷ்மீரத்து  சிங்கம் ஷேக் அப்துல்லா, கிழக்குல வங்கத்தின் பொதுவுடமை தோழர் ஜோதிபாஸ் ஆகியோரும் எதிரொலிச்சாங்க. இன்றைக்கு ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்போட கடைசி கட்டத்துல இருக்குற பா.ஜ.க, ஆர். எஸ். எஸ். விரும்பும் சர்வாதிகாரம் கொண்ட ஆட்சிய உருவாக்க நினைக்குது. அதனாலதான் அவை அரசியல் சட்டபடியும் ஆட்சி நடத்தல, மாநிலங்களையும் மதிக்கல.

மாநிலங்கள செயல்பட விடாத ஒன்றிய அரசு மாநில அரசோட சம்பளத்தப் பெற்று…. மாநில நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களை வச்சுக்கிட்டு, எண்ணற்ற மக்கள் நல திட்டங்கள எதிர்க்கட்சி ஆளுகின்ற  மாநிலங்களாக செய்ய முடியுதுனா… கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கிற ஒரு ஆட்சி ஒன்றியத்தில் அமைஞ்சா, எல்லா மாநிலங்களும் மேலும் செழிக்கும். மாநில சுயாட்சி கொள்கை வெல்லனும்னா….  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரணும்.

அதுக்கு மக்கள் தயாராகணும். வரப்போற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதா மினி நாடாளுமன்றத் தேர்தலா பார்க்கப்படுகிற… ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கு. அதுல வாக்களிக்க போற வாக்காளர் பெருமக்களும்,  இதை மனசுல வச்சி வாக்களிக்கணும்னு கேட்டுக்குறேன். நிறைவா இந்த எபிசோடை கேட்ட உங்ககிட்ட உரிமையோட நான் கேட்குறது, இந்தியா கூட்டணியோட கையில இந்தியாவை ஒப்படைங்க. மாநிலங்களை காப்போம். இந்தியாவை காப்போம். இந்தியா கூட்டணிகளை வெற்றி பெற வைப்போம்.