திமுக  தொண்டர்களிடம்  பேசியதமிழக முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.க. ஆட்சியில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு,  நம் அரசியல் சட்டம் தந்த கூட்டாட்சி கருத்தியல்… ஜனநாயகம் என எல்லாம்  மக்களுடன் சேர்ந்து கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறது. இவங்க பண்றதுல மிக மோசமானது என்னன்னா… மாநிலங்களோட கல்வி உரிமையில்  தலையிட்டு குழந்தைகளோட எதிர்காலத்தோட விளையாடுறது தான்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பண்பு இருக்கு, ஒரு கலாச்சாரம் இருக்கு, அவங்களுக்குன்னு தனிப்பட்ட சிந்தனை இருக்கு. இதையெல்லாம் அழிக்கிறதுக்கான கொள்கை தான் தேசிய கல்விக் கொள்கை.இப்படி பா.ஜ.க. ஆட்சி பறித்த உரிமைகளை ஒன்னொன்னா பட்டியல் போடணும்னா…  இன்னும் பத்து எபிசோட் பேசலாம். இது எல்லாத்துல இருந்து நம்மள பாதுகாக்குற ஒரே கவசம் மாநில சுயாட்சி தான். அதனால் தான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், மாநில சுயாட்சியை வலியுறுத்தினாங்க. நானும் வலியுறுத்திட்டு இருக்கேன்.

1974 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் நாட்டுக்கே முன்னோடியா மாநில உரிமைகளுக்கு வலு சேர்க்க ராஜமன்னார் குழு அமைச்சார். அந்தக் குழுவோட பரிந்துரைகள சட்டமன்றத்தில வரலாற்று சிறப்புமிக்க மாநில சுய ஆட்சி தீர்மானமா நிறைவேத்துனாரு. அந்தத் தீர்மானத்தில் முக்கியமான சில வரிகளை மட்டும் சொல்றேன்.

மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றி செயல்படவும், மாநில சுயாட்சி பற்றியும், ராசமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துரைகள மத்திய அரசு ஏற்று மத்தியில்  கூட்டாட்சி, மாநில சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் சட்டம் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்று இப் பேரவை முடிவு செய்கிறது.

இந்த தீர்மானத்தை தமிழ்நாட்டில அப்ப இருந்த இரண்டு அவைகளிலும் நிறைவேத்துனாங்க. இப்படி நிறைவேற்றிய அனுப்பிய தீர்மானத்தை தான், அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களும்,”These are important issues and we intend to consult all the Chief Ministers” என்று சொன்னார்.