அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தலைவர் வெளிநாட்டில் இருக்கும் போது பாத்தீங்கன்னா… என்னுடைய ஆருயிர் சகோதரர், புரட்சித்தலைவரை கருணாநிதி சொல்றாரு.  எம் ஜி ஆர் அவர்களும்,  நானும் அண்ணன் தம்பியாக ஒரு தட்டில் சாப்பிட்டோம். பாழாய் போன அரசியல் எங்களை பிரிச்சிடுச்சி. அவர் வளர்த்த திமுக கட்சியை நீ தான் குடும்ப சொத்தாக  மாற்றிட்டாய். கருணாநிதி  மக்கள் கிட்ட எனக்கு ஓட்டு போடுங்க என சொல்லுறாரு.

1984 தேர்தல்ல என்னை முதலமைசராக்குங்கள்… நான்  எம்ஜிஆர் கிட்ட முதலமைச்சர் பொறுப்பை கொடுக்கின்றேன் என சொல்லி பார்த்தாரு. எம்ஜிஆர் உயிரோடு இருக்காங்கனே தெரியாது. நாங்க எல்லாம் கேசட்டை போட்டு தான் புரட்சித்தலைவர் உயிரோடு இருக்காங்க என மக்களுக்கு காட்டினோம்.

இந்த மாதிரி டிவி எல்லாம் கிடையாது. நாளைக்கு செல்லூர் ராஜீ  பேசின யூட்யூப்,  டிவி என வரும். இதெல்லாம் நான் என்ன குறைவிட்டேனோ,  அதை மட்டும் மீம்ஸ் போடுறாங்க. இப்படி எல்லாம் அன்னைக்கு கிடையாது. ஊடக பெருமக்கள் இங்க நல்லவங்க மாதிரி இருப்பாங்க.யாத்தா…! இவுங்கள பார்த்தா பயமா இருக்குப்பா… ஊடக பெருமக்களை பார்த்தாலே  பயமாக இருக்கு. ஒவ்வொருத்தரும் இல்லாத பொள்ளத்தை சொல்லுறாங்க என தெரிவித்தார்.