சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொலியில் தயிர் உண்ணும் வினோதப் போட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக அளவு தயிர் உண்ண வேண்டும் என்ற சவாலை ஏற்றுக்கொண்ட இளைஞர் ஒருவர், வெறும் மூன்று நிமிடங்களில் 4 கிலோ தயிரைச் சாப்பிட்டு முடித்து சாதனை படைத்தார்.
View this post on Instagram
அவரது அதிவேகமான உணவு உண்ணும் முறையைக் கண்டு அங்கிருந்த பார்வையாளர்களும் போட்டி ஏற்பாட்டாளர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். போட்டிக்கு முன்னதாக முறையான பயிற்சி எடுத்திருந்தால் தன்னால் ஆறு கிலோ தயிர் வரை உண்ண முடியும் என்று அந்த இளைஞர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த காணொலி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இணையவாசிகள் அந்த இளைஞரை தயிர் வீரன் எனப் பாராட்டிப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
