பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறவர்கள் பொதுவாகக் கண்டிப்புடன் இருப்பவர்களாகவே தெரிகிறார்கள். ஆனால், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பேராசிரியர், மேடையில் மின்னலாக நடனமாடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். க்ளோபல் அகாடமி ஆஃப் டெக்னாலஜி (GAT) எனும் நிறுவத்தில் பணிபுரியும் புஷ்பராஜ் என்ற பேராசிரியர், தற்போது தனது நடனத்தால் இணையத்தில் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by @gatalbum

‘முக்காலா’ என்ற பிரபல பாடலுக்கு மேடையில் ஆடிய இந்த பேராசிரியரின் வீடியோ, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு தற்போது 70 லட்சம் பார்வைகள் மற்றும் 6 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. பாடல் ஒலிக்க ஆரம்பித்தவுடனே பேராசிரியர் ஆட தொடங்குகிறார். நடனத்தின் மத்தியில் அவரது ஒரு செருப்பு கீழே விழுந்தாலும், அவர் தன்னம்பிக்கையோடு மற்றொரு செருப்பையும் கழட்டிவிட்டு, ஆட்டத்தை தொடர்கிறார். பார்வையாளர்களும் கைதட்டல்களோடு உற்சாகப்படுத்தினர்.

இந்த வீடியோவில் அவரை ‘டான்ஸ் மாஸ்டர்’, ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன்’ என நெட்டிசன்கள் புகழ்ந்துள்ளனர். ஒரு பயனர், “உண்மையில் இவர் ஒரு டான்ஸர்; குடும்பத்துக்காகவே ஆசையை தியாகம் செய்து ஆசிரியராகிவிட்டார்” என கமென்ட் செய்துள்ளார். இது இவரின் முதல் வைரல் வீடியோ அல்ல, இதற்கு முன்பும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆடியது, இணையத்தை கலக்கியது. தனது வேலைக்கும், ஆர்வத்துக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் புஷ்பராஜ் பேராசிரியர், இன்றைய இளைஞர்களுக்கு உண்மையான ரோல் மாடலாகவே இருக்கிறார்.