இந்தியாவில் இன்று கூட அரசு வேலை என்றாலே ஒரு பெருமை, அந்த பணி கிடைக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலான இளைஞர்களும் கனவு காண்கிறார்கள். ஆனால், வங்கி அதிகாரி பணி என்ற ஆடம்பரமான அரசு வேலையை விட்டு விட்டு, மன அமைதிக்காக வெளியே வந்திருக்கிறார் 29 வயது வாணி என்ற பெண். தற்போது அவரது உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vaani & Saavi – Content Creators (@pestolicious)

வாணி, 2022-ல் IBPS தேர்வில் தேர்ச்சி பெற்று, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியில் சேர்ந்தவர். ஒரு ஆண்டு பயிற்சிக்குப் பிறகு, மீரட்டில் Scale-1 அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த வேலை, அவரை மனதளவில் முற்றிலும் சோர்வடையச் செய்ததாக கூறுகிறார். “வேலை எனக்கு நிதியளவில் சுதந்திரம் கொடுத்தாலும், நிம்மதியை எடுத்துக்கொண்டது.

“முன்பு நான் சந்தோஷமாக இருந்தேன். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில், நான் சின்ன விஷயத்துக்கே கோபம் வரும் மாதிரி மாறிவிட்டேன்” என்கிறார் வாணி. “இப்போது சம்பளத்தை நிம்மதியே முக்கியம் என உணர்ந்துள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அவர் கூறியது யாரையும் வேலை விட்டு விலகச் சொல்லவே இல்லை என்றும், வெறும் தனது அனுபவத்தை பகிர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.