உத்தரப்பிரதேச மாநிலம் மெய்ன்புரியில் நடந்த இந்த கொடூர சம்பவம் தற்போதைய சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் வழியாக தொடங்கிய காதல், இறுதியில் ஒரு பெண்ணின் கொடூரமான கொலையுடன் முடிவடைந்துள்ளது. ஒருபக்கம் காதலன் காதலியைத் தேடி அழைத்து, பின்பு கண்மூடித்தனமாக அவரது உயிரை எடுத்திருப்பது, மாவட்டத்தை உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் காதலன் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை 9 மணியளவில், மெய்ன்புரி மாவட்டத்தில் உள்ள பம்ப் அருகே அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, முதலில் அடையாளம் காண முயன்றனர். சடலத்தின் அடையாளம் தெரியாமல் போனதால் போலீசார் உடலை அரசு முறைப்படி அடக்கம் செய்தனர். சில நாட்களுக்கு பிறகு அந்த பெண் பருக்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டது. அவர் மீது அவரது குடும்பத்தினர் மாயம் போனதாக புகார் அளித்திருந்தது.

விசாரணையில், பெண் இன்ஸ்டாகிராம் வழியாக அருண் ராஜ்புத் என்ற இளைஞருடன் பழகி வந்தது தெரியவந்தது. அருண், குருகிராமில் கன்டெய்னர் டிரைவராக பணியாற்றி வந்தவர். இவர் தனது காதலியுடன் 1.5 வருடமாக பழகி வந்துள்ளார். இருவரும் ஹோட்டலில் சந்தித்து பழகிய நிலையில், அந்த பெண் சில பணம் அவருக்கு வழங்கியதாகவும்,

பின்னர் திருமணத்துக்காக வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த அருண், அந்த பெண்ணை மெய்ன்புரிக்கு அழைத்து வந்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு, சடலத்தை வீசி விட்டு தப்பியோடியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அருண் ராஜ்புத் கைது செய்யப்பட்டார். அவரது கைப்பேசிகள் இரண்டும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஏற்பட்ட சில தவறான உறவுகள் எவ்வளவு ஆபத்தானதாய் மாறக்கூடும் என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது.