தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் மகிழ் திருமேனி ஏகே 62 திரைப்படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லண்டன் நாட்டில் தன்னுடைய மனைவியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தல அஜித் தற்போது போர்ச்சுகல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகே 62 திரைப்படத்திற்காக நடிகர் அஜித் தாறுமாறாக தயாராகி வருகிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.