வரலட்சுமி சரத்குமாரின் குத்தாட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.

நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வரலட்சுமி சரத்குமார். இவர் நடித்த சண்டைக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்கள் அவரை பிரபலமடைய செய்தது. இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு குடியேறி இருக்கின்றார்.

மேலும் தனது உடல் எடையை குறைப்பதற்காக அதிகம் உடற்பயிற்சியும் செய்து வருகின்றார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் அவர் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அவரது மகிழ்ச்சிக்கான காரணம் இன்ஸ்டாவில் இரண்டு மில்லியன் ரசிகர்கள் அவருக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.